சிட்னி “உதயசூரியன்” கிழக்கு “உதயசூரியனுக்கு” சிலை எடுக்கிறார்.

“சிட்னியில் வாழும்   காரைதீவைச் சேர்ந்த “உதயசூரியன்” மாணவர் உதவி மையத்தின் தலைவரும்,  “உதயசூரியன்” பத்திரிகையின் நிர்வாக ஆசிரியருமான நாகமணி குணரெத்தினம் “கிழக்கு உதயசூரியன்” முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு சிலை எடுக்கிறார்.
 
காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்திலும் ,காரைதீவு சுவாமி விபுலானந்த கலாசார மண்டபத்திலும் விபுலானந்த சிலைகள் நிறுவப்படவுள்ளன
 
 தனதுபெற்றோரான காரைதீவைச் சேர்ந்த பொன்னம்பலம் நாகமணி தம்பதிகள் நினைவாகவும், தனதுவளர்ப்பு தந்தை காத்தமுத்து வேல்நாயகம் (தலைமை ஆசிரியர்)தம்பதிகளின் நினைவாகவும் இச்சிலைகள் நிறுவப்படவுள்ளன.
 
 காரைதீவு சண்முகவித்தியாலயத்தில் சுவாமி விபுலாநந்த அடிகளாரது திருவுருவச் சிலை ஒன்றினை நிறுவும் பணியினை     அதிபர் எஸ்.மணிமாறன் மற்றும்  எம்.புண்ணியநாதனது கண்காணிப்பில் ஆரம்பித்துள்ளார் .
 
கலாச்சார மண்டபத்தில் சிலை நிறுவும் பணி தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா வழிகாட்டலில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
 
 
இச் சிலைகள் பெரும்பாலும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிரார்த்த தினமான யூலை மாதம் 19 ஆம் திகதி திறந்து வைக்கலாம் என எதிர்பார்ப்பதாக உதயசூரியன் மாணவர் உதவி மையத்தின் தலைவரும்,  உதயசூரியன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியருமான நாகமணி குணரெத்தினம் தெரிவித்தார்.
 
 

Related posts