பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு .
தற்போது நாட்டுக்கு வந்திருக்கின்ற சீன உளவுக் கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகமாக இருக்குமானால் அதை நாங்கள் வன்மையாக எதிர்ப்போம்.
இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
சீன உளவுக்கப்பல் இலங்கை வந்திருப்பது குறித்து கருத்து கேட்கப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்…
இந்தியாவுக்கு அண்மித்த பிரதேசத்தில் இலங்கை இருக்கின்றது. ஆகவே தான் போர்சிட்டி விடயத்திலும் நாங்கள் இதனை கூறி இருந்தோம்.
இந்தியாவுக்கு அண்மித்த சூழலில் இலங்கை இருப்பதால் அதன் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் எதிர்ப்பது தார்மீகமாகும்.
அதற்காக சீனாவுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.
சிலவேளை இலங்கை தென் சீன கடலிலே இருந்து அங்கு இந்திய உளவுக்கப்பல் அங்கு தரிக்குமானால் அது சீனாவின் பாதுகாப்புக்கு குந்தகமாக இருக்கும். அப்பொழுது நாங்கள் இந்தியாவுக்கு எதிர்ப்பாக தீர்மானம் எடுப்போம்.
ஆனால் ,இங்கு சீனாவுக்கு தூரமாக இந்தியா இருக்கின்றது ஆகவே இந்தியாவுக்கு அருகாமையில் நாங்கள் இருப்பதால் நாங்கள் இந்த சீனக் கப்பல் இலங்கைக்கு வந்திருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். என்றார்.