புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில் 6 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஊரும் உறவும் பொங்கல் விழா-2019 ஜனவரி 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சுவிஸ் நாட்டின் பேர்ன் நகரில் நகரில் Treffpunkt wttig kofen Jupiterstresse 15 ,3015 Bern15 இல் இடம்பெற்றது
தமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் இவ்விழாவின்போது சுவிஸ் நாட்டின் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் வட கிழக்கு மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.
அதே வேளை மாணவர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இப்போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சுஜீ மற்றும் சகாண நகை உரிமையாளர்களின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன
இதன்போது பல்வேறு வகையான தமிழர்களின் பாரம்பரிய உணவு பரிமாறப் பட்டதுடன் பாரம்பரியம் மிக்க கலை கலாசாரப் போட்டிகள் நடைபெற்றது இந்நிகழ்வைச் சிறப்பிக்க இளையராகங்கள் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது .
இப்பொங்கல் விழாவுக்கு பல்வேறு வகையில் உதவிகளைப் புரிந்த அனைவருக்கும் சுவிஸ் உதயத்தின் நிருவாகக் குழுவினர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்