சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி 7 ஆம் கிராமம் நாமகள் வித்தியாலயத்திற்கு நிறையை அளக்கும் இயந்திரம் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.
அதிகஷ்டப் பாடசாலையான நாமகள் வித்தியாhலயத்தின் அதிபர் மு.இராஜகோபால் சுவிஸ் உதயப் பிரதிநிதிகளிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இவ் இயந்திரம் அதிபரிடம் கைளிக்கப்பட்டது.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் தலைவர் மு.விமலநாதன் அவர்களது வழிகாட்டலில் அமைப்பின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்; , பிரதித் தலைவர் ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன், ஆசிரியரும் ஊடகவியலாளருமான சா.நடனசபேசன் கணக்காய்வாளர் நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு. இவ் உபகரணத்தினை வழங்கிவைத்தனர்.
இவ் உதவியினை வழங்கிவைப்பதற்கு உதவிய சுவிஸ் உதயத்தின் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல். சுதர்சன் செயலாளர் அம்பலவாணர் ராஜன், அமைப்பின் பொருளாளர் தொழிலதிபர் க.துரைநாயகம் ஆகியேரினதும் சுவிஸ்உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உறுப்பினர்களதும் முயற்சியினால் இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது அதற்காக 7 ஆம் கிராம மக்கள் சார்பாகவும் பாடசாலை சார்பாகவும் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்