ரசிகர்களின் அமோக ஆதரவில் கிஷா பிலிம் மேக்கர்ஸின் தரமான படைப்பு

கல்முனை பிராந்தியத்தில் பல குறுந்திரைப்படங்கள் காணொளி பாடல்களை வெளியிட்டு தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் கிஷா பிலிம் மேக்கர்ஸ் தனது 15வது படைப்பையும் வெற்றிகரமாக வெளியிட்டுள்ளது. இதுவரை நம்மவர்கள் கைகோர்த்து உருவான படைப்புக்களுக்கான வரவேற்பு நிறைவாக கிடைத்திருந்த நிலையில் முதன் முறையாக தென்னிந்திய பின்னணி பாடகர் வேல்முருகன் அவர்களின் குரலில் புதிய காணொளி பாடல் “பொண்ண தொட்டா கெட்ட” எனும் தலைப்போடு வெளியானது.
 
இப்பாடலின் உத்தியோகபூர்வ வெளியீடு கல்முனை GK Cinema திரையரங்கில் வெளியீடு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. எதிர்பார்ப்பையும் மீறிய ரசிகர்களின் வருகையும் வாழ்த்துகளும் இந்த படைப்புக்கான முழுமையான வெற்றிக்க அடித்தளமிட்ட நிலையில் ரசிகர்களின் பார்வைக்காக Kisha Film Makers எனும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த காணொளி பாடலை கிஷா பிலிம் மேக்கர்ஸின் ஸ்தாபகர் டிலோஜன் இயக்கியிருப்பதோடு கல்முனை மண்ணின் இளம் இசையமைப்பாளர் சஜய் அவர்கள் வரி மற்றும் இசையில் பல தென்னிந்திய திரைப்பட பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகர் வேல்முருகன் அவர்கள் பாடலை பாடியுள்ளார். இப்பாடலின் காட்சிகளில் ஓசி வைஃபை யூடியூப் சேனலின் யசோ மற்றும் பிரான்சிஸ் உடன் மட்டு அம்பாறையை சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட கலைஞர்கள் தமது தனித் திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர்.
 
இந்த ‌பாடலை நீங்களும் யூடியூப் தளத்தில் பார்வையிட்டு நமது கலைஞர்களின் உயர்விற்கு உரமிட மறக்காதீர்கள்.

Related posts