(சா.நடனசபேசன்)
கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார மேம்பாடு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்கிவரும் சுவிஸ் உதயம் அமைப்பின் மட்டக்களப்பு திராய்மடு பணிச்சயடியில் அமைந்துள்ள காணியில் சுவிஸ் உதயம் அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 04.072022 திங்கட்கிழமை நடைபெற்றது.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், சுவிஸ் உதயம் தாய் சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமைப்பின் கிழக்கு மாகாண செயலாளர் ரொமிலா செங்கமலனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதித்தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் க.வரதராஜன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் பிரதிச்செயலாளர் சா.நடனசபேசன் உறுப்பினர்களான இ.ஜீவராஜ் அகிலன்,யுதர்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.