எஸ்.சபேசன்
நாட்டில் கொவிட் 19 தாக்கம் அதிகமாக உள்ள வேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்கள் உணவுக்காக பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதனைக் கருத்தில் கொண்டு சுவிஸ் உதயம் அமைப்பின் மூலம் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையிலி வெள்க்கிழமை இடம்பெற்றது
சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல். சுதர்சன் அவர்களது சகோதரி ஞானமலர் அவர்களது புதல்வரது ஞாபகார்த்தமாக வாகரை குஞ்சன்கற்குளத்தில் வசிக்கும் 77 குடும்பங்களைச் சேர்ந்த ஆதிவாசிகளுக்கு இவ் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இதனை அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் உப செயலாளர் திருமதி செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.
சுவிஸ் உதயம் அமைப்பினரிடம் அப்பிரதேச நலன் விரும்பிகள் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது.
இவ் உலர் உணவுப்பொதிகளை வழங்குவதற்கு உதவிசெய்த சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்சன் செயலாளர் அம்பலவாணர் ராஜன் பொருளாளர் க.துரைநாயகம் மற்றும் சுவிஸ் உதயத்தின் உறுப்பினர்கள் இவ் உதவியை வழங்கிய தலைவர் டி.எல். சுதர்சன் அவர்களது சகோதரி ஞானமலர் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் ஆதிவாசிகள் சங்கத்தின் தலைவர் நன்றிகளைத்த தெரிவித்துள்ளனர்