இன்று 33வருட கல்விச்சேவையிலிருந்து விடைபெறும் அதிபர் புட்பமூர்த்தி!

பட்டிருப்பு வலயத்தின் மகிளுர் சரஸ்வதி வித்தியாலய அதிபர் நாகமணி புட்பமூர்த்தி இன்று(19.07.2021) தனது 33வருட கால கல்விச்சேவையிலிருந்து ஓய்வுபெறுகிறார்.
 
குருமண்வெளியில் 19.07.1961 இல் பிறந்த நாகமணி புட்பமூர்த்தி ஆரம்பகல்வியை தனது ஊரிலுள்ள குருமண்வெளி சிவசக்தி ம.வித்தியாலயத்திலும் இடைநிலைகல்வியை  பட்டிருப்பு ம.வித்தியாலயத்திலும் பயின்றார்.
 
1988இல் நடந்த ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த புட்பமூர்த்தி    22.08.1988 அன்று முதல்நியமனத்தை  குருமண்வெளி சிவசக்தி ம.வித்தியாலயத்தில் பெற்றார்.
மட்டக்களப்பு ஆசிரியர்கலாசாலையில் 1990-92களில் ஆரம்பக்கல்வி பாடநெறிஆசிரியராக பயிற்சிபெற்ற புட்பமூர்த்தி சிறந்த பேச்சாளராவார்.
 
பேராதனைப்பல்கைக்கழகத்தில் கலைப்பட்டதாரியாக வெளியேறிய அவர் பட்டமேல் கல்வி டிப்ளோமா  பயிற்சியை  இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்தார்.
2009 இல் நடைபெற்ற அதிபர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அவர் மண்டுர் மகாவித்தியாலயத்தில் முதல்  அதிபர் நியமனத்தை பெற்றார்.
 
தொடர்ச்சியாக  மகிழூர் சரஸ்வதி ம. வித்தியாலயத்தில் அதிபராகவிருந்து இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.

Related posts