சுவிஸ் உதயம் அமைப்பின் விஷேட  நிருவாகசபைக் கூட்டம்

சுவிஸ் உதயம் அமைப்பின் விஷேட  நிருவாகசபைக் கூட்டம் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் அவர்களின் தலைமையில் போரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள சுவிஸ் உதயம் அமைப்பின் அலுவலகத்தில் 2022.12.18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

இக் கூட்டத்திற்கு சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தார்.

 இக்கூட்டத்தில் அமைப்பின் செயலாளர் திருமதி றோமிலா செங்கமலன் பொருளாளர் பாவாணர் அக்கரைப் பாக்கியன் பிரதித் தலைவர் ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன் பிரதிச் செயலாளர் ஊடகவியலாளர் .சா.நடனசபேசன் உறுப்பினர்களான அகிலன் ம.காறூஸ் உட்பட நிருவாகசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சுவிஸ் உதயம் அமைப்பின்மூலம் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட உதவித் திட்டங்கள் தொடர்பாக

வும் எதிர்காலத்தில் செய்யவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் மட்டக்களப்பு திராய்மடுவில் அமைக்கப் படுகின்ற சுவிஸ் உதயம் அமைப்பின் உத்தியோக பூர்வ அலுவலகத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படடு இறுதிக்கட்டத்தில் இருப்பதுடன் அவ்வேலையினை விரைவாக முடித்து சுவிஸ் உதயம் அமைப்பின் பணிகளை அங்கிருந்தே செயற்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டன

Related posts