அரச உயர் அதிகாரிகளை தன்னகத்தே கொண்ட பெருமைக்குரிய செட்டிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள செட்டிபாளையம் மாகா வித்தியாலயம் கடந்த 2017 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக மூன்று மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று பாடசாலையின் பெறுபேற்றில வளர்ச்சியில்; திருப்புமுனையை எற்படுத்தியள்ளனர்.
பிரபாகரன் தர்சினி, கருணாநிதி விருபாகரன், உதயகுமார் பிரபாஞ்சலிகா ஆகிய முன்று மாணவ முத்துக்களே பெருமைக்குரிய பெறுபேற்றைப் பெற்றவர்களாகும். 2015ல் ஒரு மாணவன் மட்டும் 9ஏ பெறபேற்றைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்க்கும் வரலாற்றை ஆரம்பித்து வைத்தான். 2017ல் அது மூன்றாக அதிகரித்து செட்டிபாளையத்தை முகம் மலரச் செய்துள்ளது.
அதன் வெளிப்பாடாக பாடசாலையின் கல்விச் சமூகமும். புhடசாலையின் அபிவிருத்திச் சங்கமும். பழைய மாணவர் சங்கத்தினரும் கைகோர்த்து அந்த மாணவர்கள் உட்பட பாடசாலையின் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வை கச்சிதமாகச் செய்து முடித்துள்ளனர்.
இப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத் தலைவராக அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர்நாயகம் எஸ்.அமலநாதன் பழைய மணவர் சங்கத்தின் உபதலைவராகவம், மீள்குடியேற்ற புனருத்தாரண இந்துகலாசார அமைச்சின் மேலதிகச் செயலாளர் எஸ்.பாஸ்கரன் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளராகவும், நிதி அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.கோபாலரெத்தினம் பழைய மாணவர்சங்கத் தலைவராகவும் அதிஸ்டவசமாக மண்ணின் மைந்தர்கள் குறித்த பதவிகளை அலங்கரிப்பது பாடசாலையின் குறிக்கோள்களை குறுகிய காலத்தில் எட்டுவதற்கான முதற்படியாகக் கருதப்படுகின்றது.
அதை உறுதிப்படுத்தவதுபோல் கௌரவிப்பு விழா பாடசாலையின் அதிபர் பி.ரவீந்திரன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினர்களாக பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், சிரேஸ்ட சட்டத்தரணியும் பதில் நீதவானுமான கே.பேரின்பராஜாவும் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக ஓய்வுநிலை இளைஞர்சேவை மன்ற பணிப்பாளர் பொன் செல்வநாயகம், டாக்டர் ரி.மிருணாளன், பிரதேசபை உறுப்பினர் என்.குணசுந்தரம் மற்றும் விசேட அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் ரி.அருள்ராஜா மற்றும் உள்ளுர் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.