“
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெ . சி . கமகே அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் வீதிகளில் குப்பைகளை போடுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட விழிப்புணர்வு நிகழ்வுகளை இராணுவத்தினரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
அந்தவகையில் மட்டக்களப்பு 231 வது இராணுவ பிரிவின் நான்காவது கஜபா பிரிவு இராணுவ அதிகாரிகளுடன் மட்டக்களப்பு மாநகர சபை இணைந்து முன்னெடுக்கப்படும் ” சேர்ந்து காப்போம் கிழக்கை எனும் தொனிப்பொருளில் ” பாதையில் குப்பை போட வேண்டாம் என வலியுறுத்தும் பிரதான நிகழ்வு இன்று மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பிட வளாக பகுதியில் நடைபெற்றது .
231 வது இராணுவ கட்டளை அதிகாரி கேணல் எஸ் .பி .ஜெ தலைமையில் கேணல் ஜி . ஆர் . எல் .எல் .வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற பிரதான ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த் , மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் , சி ஐ . குமாரசிறி , மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் . இதன்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மக்கள் பார்வைக்காக விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ,வாகனங்கள் , வியாபார நிலையங்கள் , மக்கள் நடமாடும் பொது இடங்களில் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது