பலாங்கொடையில் இகி.மிசன் சுவாமி நீலமாதவானந்தா ஜீக்கு பெருவரவேற்பு! இந்து ஆன்மீக விழிப்புணர்ச்சி சொற்பொழிவு: இ.கி.மிசனோடு பயணிக்க மக்கள் ஆசை!

இராமகிருஸ்ணமிசனின் மட்டு.மாநில துணைமேலாளரும் ஆன்மீகஎழுத்தாளருமான ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா மஹராஜீக்கு பலாங்கொடையில் பெருவரவேற்பளிக்கப்பட்டது.
 
அங்குள்ள இந்து பிரமுகர்களின் அழைப்பையேற்று அங்கு விஜயம் செய்த சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் பலாங்கொடை தமிழ்மகா வித்தியாலயம் ராசகல தமிழ்வித்தியாலயம் பின்னவல தமிழ்மகா வித்தியாலயம் இந்துக்கல்லூரி ஆகிய  பாடசாலைகளுக்கு விஜயம் செய்தார்.
 
அங்கு ஆசிரியர் மாணவர்க்கு இந்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். சுமார் 1000 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்ட இவ்விழாவில் சுவாமிஜீக்கு பெரும் கௌரவமளிக்கப்பட்டது.
 
 பின்னவல பிரதேசத்தில் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் ஆலய   அர்ச்சகர்கள் கலந்துகொண்ட நிகழ்வு நடைபெற்றது
 
மேலும்  பலாங்கொடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பொதுமக்களுக்கான சொற்பொழிவு ‘இந்து மதம் நமது மதம்’ என்ற தலைப்பில்  நடைபெற்றது . நீ;ண்டகாலத்திற்குப்பிறகு இத்தகைய ஒருசொற்பொழிவைக்கேட்டதாக அவர்கள் திருப்தியோடு கருத்துரைத்தனர்.
 
ராமகிருஷ்ண மிஷனோடு  இணைந்து சேவை செய்வதற்காக அங்குள்ள ஊர் பிரமுகர்களும் இந்து மக்களின் பிரதிநிதிகளும் விருப்பம் தெரிவித்தனர்.
 
அங்கு ‘சுவாமி விவேகானந்தர் நலன்புரி நிலையம்’ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ராமகிருஷ்ண மிஷனோடு இணைந்து  பயணிப்பதற்கு ஆசை கொள்வதாக தெரிவித்தனர்.
சுமார் பல தசாப்தகாலத்திற்குப்பிற்பாடு இ.கிமிசன் சுவாமியொருவர் இப்பிரதேத்திற்கு விஜயம்செய்து இவ்விதம் இந்துசமயஎழுச்சி தொடர்பான ஆன்மீகசொற்பொழிவாற்றியமை இதுவே முதற்றடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts