மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிழக்கு ஆபிரிக்காவின் சீசெல்ஸ் (Seychelles) நாட்டிற்குப் பயணமாகியுள்ளார்.
ஜனாதிபதி, இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.10 மணியளவில் சீசெல்ஸ் நோக்கிப் பயணமாகியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விஜயத்தினை 18பேர் கொண்ட குழுவினருடனே மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றதாக கூறப்பட்டு வருகின்றது. இது இலங்கை அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதி தீடீர் விஜயமாக கிழக்கு ஆபிரிக்காவின் சீசெல்ஸூக்கு பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.