நாட்டின் தனித்துவத்தைப் பாதுக்காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சஜித் யாழில் தெரிவிப்பு

நாட்டின் சுயதீன தன்மை மற்றும் தனித்துவத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதச தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி மந்துவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நாவலர் கோட்டம் என்ற 135 ஆவது மாதிரிக் கிராமம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய போதே வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்நாட்டை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாட்டின் சுயதீன தன்மை மற்றும் தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும். அத்துடன் இன ஐக்கியத்தையும் பாதுகாப்பது எமது கடமையாகும்.

இன்று இரண்டு முறைகளில் இன ஐக்கியம் பேணப்படுகின்றது. அதாவது அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மன ஸ்தலங்களை எரியூட்டுவதன் மூலம் இன ஐக்கியத்தை பேணுகின்றார்கள்.

எம்மை பொறுத்தவரையில் நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் இலங்கை தொடர்பான உணர்வு இருப்பது அவசியமாகும்.

இன்று நாட்டில் எந்த பிரச்சினைகளும் இல்லை. அனைவருக்கும் ஒரே அகப்பையில் உணவு பகிரப்படுகின்றது. இதன் மூலம் நாட்டின் ஐக்கியம் மேலோங்கிக் காணப்படுகின்றது.

எவரும் நான் முன்னெடுக்கும் வீடமைப்பு திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது. குறிப்பாக 2500 க்கும் அதிகமான உதா கம்மான கிராமங்களை உருவாக்குவது உறுதி” என்று தெரிவித்தார்.

Related posts