ஜனாதிபதி பதவியோற்று ஒரு வருட பூர்த்தியையும், பிரதமர் அவர்களின் 75வது பிறந்த தினத்தையும் மற்றும் கொரோனாவில் இருந்து நாட்டை பாதுகாக்கவும் வேண்டி  துஆப் பிரார்த்தனை நிகழ்வு.

(றாசிக் நபாயிஸ், அம்பாறை மாவட்ட பிராந்திய நிருபர்)
 
 
 
 
மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கிளையில் விஷேட கூட்டம் கிளையின் தலைவர்,
எம்.எல்.எம்.முஸ்தபா தலைமையில் இன்று (2020/11/18) இடம் பெற்றது.
 
இதில் மருதமுனையின் சமகால அரசியல் நிலைமைகள், எதிர்கால வேலைத்திட்டங்கள், ஏழை மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்குதல் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக பேசப்பட்டதுடன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் பதவியோற்று ஒரு வருட பூர்த்தியையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் 75வது பிறந்த தினத்தை நினைவு கூர்ந்தும் மற்றும் கொரோனாவில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கவும் வேண்டி மருதமுனை பொதுஜன பெரமுன கிளையினால் துஆப் பிரார்த்தனை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது  தூஆப் பிராத்தனையை மெளலவி ஏ.எல்.அலி ஜின்னா நிகழ்த்தினார்.
 
ஜனாதிபதி, பிரதமரின் கொள்கை திட்டங்களுக்கு அமைய வருங்கால செயற்திட்டங்களை முன்னெடுப்பது எனவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் நாங்கள் இந்த நாட்டுக்கு புதிய அரசாங்கத்துக்கும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
இந்நிகழ்வின் கிளையின் செயலாளர் ஜ.எல்.எம். முதுலித்தீன்,  கிளையின் பிரதம ஆலோசகர் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.ஏ.சமட், பொருளாளர் எம்.ஆர்.எம்.றிஸ்லி, ஏனைய முக்கிய அங்கத்தவர்கள், மருதமுனையின் பொதுஜன பெரமுன பெண்கள் அணித்தலைவி ஆர்.எம்.ஹாமிலா என பெண்கள் பலர் இதில் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட அனைத்து அங்கத்தவர்களுக்கும் பகல் போசனமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts