மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் ஜூன் மாதத்துக்கு முன்னர் நடத்த அமைச்சரவை ஏகமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருந்திருந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு உள்பட 6 மாகாண சபைகள் ஆட்சிக்காலம் நிறைவடைந்த நிலையில் ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் அவை அனைத்தும் உள்ளது.
இதேவேளை மாகாண சபை தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நடத்தவில்லை என்றால், தாம் பதவிவிலகப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.