ஜே.வி.பியின் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: த.தே.கூட்டமைப்பில் மாறுபட்ட கருத்துக்கள்

மக்கள் விடுதலை முன்னணியின் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மாறுபட்டக் கருத்துக்கள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின்போது மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவருகின்ற 20 ஆவது திருத்தச் சட்டத்தில் இனப்பிரச்சினை தொடர்பில் பாரியளவில் சொல்லப்படவில்லை என ரெலோ இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களுடைய வடக்கு கிழக்கு இணைந்த பிரச்சினைகள் கூடுதலாக ஜே.வி.பி ஒத்துவராத சூழல் இருந்து வருவதாகவும் அது தொடர்பில்ஆராய்ந்து ஆதரிப்பதா? அல்லது மக்கள் விடுதலை முன்னணியினருடன் பேசி அதனை சேர்த்துக்கொள்வதா என்பது தொடர்பில் முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அண்மையில் இந்த கருத்தினைக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts