மட்டக்களப்பு மாவட்டத்தின் போருக்கு முன்னரான நிலமையும் தற்போது காணப்படுகின்ற நிலமையினையும் அறிந்து கொள்வதற்காக டோகா பல்கலைகழக உயர்பட்ட படிப்பினை மேற்கொள்கின்ற 9நாடுகளைச் சேர்ந்த 16 பிரதி நிதிகள் இன்று (20.10.2019) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு 9.30 மணியலவில் வருகை தந்திருந்தார்.
போர்கால நிலவரமும் தற்கால அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலமையிலான திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் எஸ்.அமுதலிங்கம் அவர்களின் குழுவினர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
டோகா பல்கலைகழகத்தில் மீள் கட்டுமானத்துறை வர்த்தக வியாபார தொழில் நுட்பத்துறை அரசியல் விஞ்ஞானதுறைகளில் கலாநிதி பட்டத்தினை பெறுவதற்காக கல்வியினை கற்று வருகின்ற குழுவினரின் பணிப்பாளர் சுல்தான் பரகத் அவர்களும் அத்தோடு கொழும்பு பல்கலைகழகத்தின் உயர்தரபிரிவின் விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ் அஸிஸ் அவர்களும் இச்சந்திப்பின் போது மத்தியகிழக்கு நாடுகள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கான சவால்கள் முன்னிருத்தி நாட்டினை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்கின்ற செயல்திட்டத்தினை போன்று இலங்கையையும் குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களிலும்நிகழ்கின்ற தடையூருகளை நிவர்த்தி செய்து எவ்வாறு அபிவிருத்தியினை முன்னெடுத்து செல்வது எவ்வாறான உதவித்திட்டங்கள் மக்களுக்கு அவசியப்படுகின்றது என்பது தொடர்பாகவும் மீள்குடியேற்றப்படுவதற்கு எவ்வாறாக புறக்காரணிகள் தடையாக இருந்து வருகின்றது அதற்காக எவ்வாறு தீர்வுகள் வழங்கலாம் என்பது பற்றி தெளிவாக ஆராயப்பட்டது.
டோகா பல்கலைகழகத்தில் கல்வி கற்றுவருகின்ற பாக்கிஸ்தான் டேகி லிவ்வியா மொராக் இந்தோனேஸியா கட்டார் சிரியா இலங்கை போன்ற நாட்டு உயர்கற்கை நேரியினை கற்கின்ற மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.