தேசிய மட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட சாதனை மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு

மருதமுனையை தளமாக கொண்டியங்கும் ரி.எம்.நியூஸ் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்த மருதமுனையில் மாகாண மட்டத்தில் சாதனை நிலைநாட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  (16) வலையமைப்பின பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஷினாஸ் தலைமையில மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
 
கல்முனை மாநகர சபையின் முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் ரி.எம்.முபாரிஸ், பிறை எப்.எம் கட்டுப்பாட்டாளர் பஸீர் அப்துல் கையும், ஏசியா பவுண்டேசன் ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு மாணவர்களை மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர்.  
 
கிழக்கு மாகாண ஆங்கில தினப் போட்டி மற்றும் மீலாதுன் நபி தின போட்டிகளில் முதலாம், இரண்டாம் இடங்களை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்ட்ட கமு/புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலய மாணவர்களான யு.எப்.அனா, ஏ.எஸ்.எப்.சம்றா, கமு/ஸம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களான எ.கே.எப்.மனால், எம்.எம்.தீனால் திபாப், அல்மனார் மத்திய கல்லூரி மாணவி ஏ.கே.சோபா நூர் மற்றும் கிழக்கு மாகாண மீலாத் – துன் நபி தின கிறஆத் போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தேசியமட்டத்துக்கு தெரிவான எச்.எஸ்.முகம்மட் முறைஸ் ஆகிய மாணவர்களின் சாதனையை பாராட்டி மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்
 
அண்மையில் நவீன ஸ்மாட் வெள்ளைப் பிரபரம்பை கண்டுபிடித்த மாணவன் எம்.ரி.முஹம்மட் ஜினான்(அல்-மனார் மத்திய கல்லூரி) , மனித வலு இல்லாமல் இயங்கும் கைத்தறிநெசவு இயந்திரத்தை கண்டுபிடித்த எம்.ஜெ.அஸ்மத் ஸராப் (ஸம்ஸ் மத்திய கல்லூரி) ஆகிய இளம் கண்டுபிடிப்பாளர்களும் இங்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்வில் ஊடக வலையமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளம் திறந்து வைக்கப்பட்டதுடன் புதிய மேலங்கியும் வெளியீட்டு வைக்கப்பட்டன. இதில் பாடசாலையின் அதிபர்கள், கல்வியலாளர்கள், அரசியல்பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts