தங்கப் பதக்கம் வெண்று மட்டக்களப்பிற்கு பெருமைசேர்த்த மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருக்கு அரசாங்க அதிபர் கருணாகரன் பாராட்டு

அகில இலங்கைரீதியில் இடம்பெற்ற சிரேஸ்ட மெய்வல்லுனர் களுக்கிடையிலான   (MSTER’S ATHILETICS SRILANKA) 07 வதுவிளையாட்டுப் போட்டியில் தேசிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதங்கங்களை வெண்று மட்டக்கப்பு மாவட்டத்தற்திற்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு மாவட்டசெயலக விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் பஞ்சாச்சரம் ஜெயக்குமாருக்கு அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் பாரட்டுத் தெரிவித்தார். 
 
கடந்த டிசம்பர் 11,12 ஆந் திகதிகளில் கொழும்பு சுகதாச விளையாட்ரங்கில் நடைபெற்ற 55 – 60 வயதிற்குட்பட்ட திறந்தபோட்டியில் கோலூன்றிப் பாய்தல் (Pழடந எயரடவ) போட்டியில் 2.30 மீற்றர் பாய்ந்து முதலாம் இடதைப் பெற்று தங்கப்பதக்கத்தையும்  100அ ஓட்டப் போட்டியில் 12.6 செக்கன்களில் தூரத்தினைக் கடந்து இரண்டாம் இடத்தைபெற்று வெள்ளிப் பதக்கங்களையும் தனதாக்கிக் கொண்டார். 
 
 
களுதாவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1972-1984 காலப்பகுதியில் களுதாவளை மகாவித்தியாலயத்திலும், மட்ஃமெதஸ்த மத்தியகல்லூரியிலும் தனது ஆரம்ப மற்றும் உயர் கல்விகளைக்கற்றார். பாடசாலைக் காலத்தில் திறமையாக விளையாடி மெய்வல்லுனர் சம்பியன் பட்டத்தினையும் பலதடவைகள் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து விளையாட்டு அமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் இளைஞர் சேவைமன்றத்தினால்; நடாத்தப்பட்டபோட்டிகளிலும் மற்றும் விளையாட்டுத்துறைசார்ந்த உத்தியோகத்தர்களுக்கான போட்டிகளிலும் பங்குகொண்டு பல்வேறுபட்ட (மெய்வல்லுனர்) வெற்றிகளையும் ஈட்டியுள்ளார்.
 
 
இவ்வாறாக கடந்தகாலங்களில் திறமைகாட்டியதன் பயனாக இவ்வயதிலும் தற்போது இலங்கை தேசியமட்டத்தில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்துகொண்டு உத்வேகத்துடன் தனதுதிறமையினை தொடர்ந்து காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts