தடைகளை உடைத்தெறிந்து சாதனைகளை புரிந்தவர்கள் கிராமப்புற மாணவர்களே -பாராளுமன்ற உறுப்பினர்

தடைகளை உடைத்தெறிந்து சாதனைகளை புரிந்தவர்கள் கிராமப்புற மாணவர்களே என தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

வெளியான க.பொ.த உயதரப் பரீட்சையில் எருவில் கிராமத்தில் அதிகூடிய பெறுபேற்றைப்பெற்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு  அப்பிரதேசத்தின் சமூக சேவகர் அ.வசிகரன் அவர்களது அனுசரணையுடன்  5 ஆம்திகதி சனிக்கிழமை  மாலை எருவில்  சிக்கனக் சேமிப்பு கூட்டுறவு சங்க வங்கி மண்டபத்தில்  இடம்பெற்றது.

சமூகசேவகர் அ.வசிகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலை மற்றும் வர்த்தகத்துறைகளில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான 7 மாணவர்களுக்கு பணப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துப் பேசும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் அப்பகுதியைச்  சேர்ந்த பலர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் சமூகத்தின் இருப்பிற்கான சொத்து கல்வி. கல்வியில் சாதனைகள்இ வெற்றிகள் என்பவற்றை கடக்க வறுமை என்பது ஒரு தடையல்ல எமது முன்னோடிகள் கல்வியின் மூலமே தமிழ் சமூகத்தின் ஸ்திர தன்மையை காலுன்ற செய்துள்ளனர் 

கல்வியில் இப்பொழுது அதி கஸ்ர பிரதேச மாணவர்களே அதிகமான சாதனைகளை புரிந்து வருகின்றனர். இந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நரிப்புல் தோட்டம்இ அம்பாறை 15ஆம் கிராமம் போன்ற பிரதேசங்களில் இருந்து சாதனைகளை நிகழ்த்தியிருப்பதை சமூக வலைத்தளங்களில் மூலம் அறிய முடிகின்றது.

1990ஆம் ஆண்டு காலங்களில் அப்போதைய ஆயுதகுழுக்களின் கெடுபிடிகள்இ வறுமை என பல போராட்டங்களுக்கு மத்தியில் பெற்றோர்கள் தங்களை உருக்கி பிள்ளைகளை சிற்பங்களாக வடித்துள்ளனர்.

இதில் பல தாய்மார்களின் அயராத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றை விபரிக்க வார்த்தைகள் இல்லை இவ்வாறான சம்பவங்கள் மட்டு. மாவட்டத்தின் பல பின்தங்கிய கிராமங்களில் நாம் கண்கூடாக கண்ட விடயங்கள். இன்றைய சூழ்நிலை இவ்வாறானதல்ல பல சமூக சேவையாளர்கள்இ வெளிநாடு வாழ் கிராமவாசிகள் குழுக்களாக இணைந்து தாமாகவே மனமுவர்ந்து கல்விக்கான ஊக்கங்களை செய்வது மாணவர்களது வெற்றிகளுக்கு படிக்கட்டுகளாக அமையும்

இவ்வாறான சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தி கிராமத்தின் அவாவான வைத்தியதுறைக்கு செல்ல கூடிய சரியான மாணவர்களை அடயாளம் காண புத்திஜீவீகள் ஆசிரியர்கள் துணைபுரிய வேண்டும் ஆனால் மாணவர்களது மனதைத் தொட்டவர்களாகவும் சமூகத்தினை நல்வழிப்படுத்துபவர்களாகவும் ஆசிரியர்கள் திகழவேண்டுமே தவிர மாணவர்களை பாழாக்கியவர்களாக ஆசிரியர்கள் மாறக்கூடாது பாடசாலை எங்கு உள்ளது என்பது முக்கியமல்ல கஷ்டமா என்பது முக்கியமானதல்ல அங்கு கல்வி கற்கின்ற மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையினை ஊட்டி எதனையும் எங்கிருந்தும் சாதிக்கமுடியும் என்பதனை ஆசிரியர்கள் மாணவர்களது மனங்களில் விதைக்கவேண்டும் குறிப்பாக சமூகத்தினை முன்னேற்றும் சிந்தனை இருக்குமானால் அப்பாடசாலை மாணவர்கள் மீது கற்பிக்கும் ஆசிரியர்கள் மனம் வைத்து  தங்களது செயற்பாடுகளை முன்வைக்கும் போது எதனையும் இலகுவாக சாதிக்கமுடியும்  என்பதனை மறந்துவிடமுடியாது என்றார்




Related posts