ஆளுநர் நியமனம் தொடர்பில் த.தே.கூட்டமைப்பை குற்றம் சாட்டுவது தவறானது

ஆளுநர் நியமனம் என்பது ஜனாதிபதிக்கு உரிய அதிகாரம் எனவே அவர் இதனை செய்திருக்கின்றார் அதனை மக்கள் விளங்கி கொள்ள வேண்டும் இதற்காக த.தே.கூட்டமைப்பை குற்றம் சாட்டுவது தவறானது விடயம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். 
கிரானில் பிரதேச சபை உறுப்பினர் பகீரதனின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலே  இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
 சந்திப்பில் தமிழரசு   கட்சியின் பொதுச் செயலாளர்  துரைராஜசிங்கம் , பாராளமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன

மேலும் தனது உரையில்

நாட்டில் மீண்டும் ஒரு   மோசமான நிலைமை ஏற்படும் என்பதற்காக ஜனநாயக்கத்துக்காக பாதுகாக்க சில முடிவுகளை எடுத்திருந்தோம் இல்லையெனில் மோசமான  காட்டாட்சி ஏற்பட்டிருக்கும்  இதை ஏற்படாமல் தடுத்திருப்பது கூட்டமைப்பு  தான் என்பதை மக்கள் விளங்க வேண்டும்

வருகின்ற தேர்தல்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ஏமாற்றி பிழைப்பவர்கள் இருக்கின்றார்கள்
TMVP  பிரசாந்தன் அவர்கள் கூறுகின்றார்கள் தமிழ் மக்கள் கொத்து குண்டுகளால்  கொல்லப்படும் போது த.தே.கூட்டமைப்பை  என்னத்த பார்த்து கொண்டிருந்தார்கள் என , அவ்வாறு கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர்களே இதை பற்றி கூறுகின்றார்கள் .

 இப்படியான பிழையான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி அரசியல் இலாபம் தேட இருக்கிறவர்கள் மத்தியில் கவனமாக இருக்க வேண்டும் .

Related posts