தனிமைபடுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுகான முக்கிய அறிவித்தல்.

காத்தான்குடி நகரம் கொரோனா தொற்றின்  காரணமாக பொது மக்களின் சுகாதார நலன் கருதி கடந்த ஒரு வார காலமாக பூரண முடக்கம் பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
 
கடந்த நாட்களாக எமது பிரதேசத்தில் எடுக்கப்படுகின்ற ரபிட் அன்டிஜன் பரிசோதனையின்படி தொடர்ச்சியாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது மிகப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது மிக அவசியமான சுகாதார நடைமுறைகளை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
 
எனவேதான் இவ்வாறான தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு தொடர்ச்சியாக காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் முடக்க நிலையினை முறையாக பின்பற்றப்படாமையினை எல்லோராலும் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டதுடன் இது சம்மந்தமாக இன்றைய மாவட்ட செயலக கூட்டத்திலும் கலந்தாலோசிக்கப்பட்டது.
 
அதனால்  இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில்  சில இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தினை மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினர் எடுத்துள்ளளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
 
இதனால் இன்று இரவிலிருந்து மிகக் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.  
 
வீட்டைவிட்டு அனாவசியமாக வெளியேறல், தேவையற்ற நடமாட்டம்  என்பன கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். நாட்டின் பிற மாவட்டங்களில் இவ்வாறான நிலை காணப்பட்டதனாலேயே பிரதேச முடக்கம் வாரங்கள் கடந்து மாதங்களாக நீண்டமையை நாமறிவோம்.
 
எனவே  அனுமதியின்றி வீதியில் நடமாடுகின்றவர்கள் வீட்டுக்கு வெளியே வருகின்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலீசாருக்கு  இறுக்கமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.
 
அத்தோடு அனுமதியின்றி வெளியில் வாகனங்களில் நடமாடுகின்றவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்கப்படும்.
 
அனுமதியின்றி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்கின்றவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 
இன்று  இரவிலிருந்து முழுமையான இராணுவ  பாதுகாப்பு நடைமுறைகளும் எமது பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
 
இவ் நடைமுறைகளை பின்பற்றாத பட்சத்தில் வருகின்ற வாரங்களில் கூட எமது பிரதேசத்தில் சாதாரண வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது துரதிர்ஷ;டவசமான நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.            
எனவே  எமது பிரதேசத்தின் பொருளாதார நிலையினைக் கருத்தில் கொண்டும் எமது மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது முடக்கத்துக்கு பூரணமான ஒத்துழைப்பினை தருமாறு மிகவும் பணிவன்புடன் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினர்  கேட்டுக்கொள்கின்றேன்.        
 
சமூகப் பொறுப்பு சகலருக்கும் உண்டு என்பதனையும், நாம் தொற்றுக்குள்ளாகாமலும் பிறரையும் தொற்றுக்குள்ளாக்காமலும் செயற்பட்டு பொறுப்புடன் நடந்துகொள்வோம்.  

Related posts