தமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்

தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதிக்கு அக்கறையில்லை இல்லை என நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கலால் கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல் மற்றும் நிதி ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழான ஏழு யோசனைகள் மீதான விவாதம்  (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,”தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற படுகொலைகளையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.

படுகொலை இடம்பெற்றதை அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே இலங்கையில் நீதி, நியாயம் என்பன ஏற்படும். இதனை ஏற்றுக்கொள்ளும் வரை நாட்டில் அமைதி ஏற்படப்பேவதில்லை.

தமிழ் மக்களுக்கு இன்னும் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்வதுடன் அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில் இந்த நாட்டில் தொடர்ந்தும் பிரச்சினைகள் தோன்றிய வண்ணமே இருக்கும் என்பதையும் முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.

எனவே நீதியின் அடிப்படையில் சிந்தித்து இந்த நாட்டின் ஜனாதிபதியும் அரசியல்வாதிகளும் செயற்படவேண்டும்’ என நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மேலும் தெரிவித்தார்.

Related posts