தமிழீழ வரலாற்றில் தேசத்திற்காக தன் உயிரையே தியாகம் செய்த எமது தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கின்றனர் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தினர்.
21 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் திருக்கோயிலில் அமைந்துள்ள குறித்த சங்கத்தின் காரியாலத்தின் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அதன் தலைவி தம்பிராசா செல்வராணி இவ்வாறு அறைகூவல் விடுத்திருந்தார்.
அவர் மேலும் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்
கடந்த 1987 ஆம் ஆண்டு 09 ஆம் மாதம் 14 ஆம் திகதி யாழ் நல்லூர் பகுதியில் வைத்து தமிழீழ வரலாற்றில் தேச விடுதலைப்போராட்டத்திற்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார் தியாக தீபம் திலீபன் அவர்கள் அதனடிப்படையில் அவரது போராட்டமானது 12 நாட்கள் தொடர்ந்து உயிர்நீத்தார்.
அந்தவகையில் அவரது தியாகத்திற்கும் 31 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இவ்வருடம் அம்பாறை மாவட்டத்தின் சார்பில் எமது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தின் மூலமாக எதிர்வரும் 25.09.2018 ஆம் திகதி திருக்கோவில் விநாயகபுரத்தில் அமைந்துள்ள சகலகலை அம்மன் ஆலயத்தில் காலை 09.00 மணிக்கு தியாக தீபம் திலீபன் அவருக்கான நினைவேந்தல் நிகழ்வும் விசேட பூஜையும் ஏற்பாடு செய்துள்ளோம்.
அதன் பிரகாரம் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் தேசத்தின் உணர்வாளர்களையும் சமூக நலன்விரும்பிகளையும் காணாமல் போனவர்களின் உறவினர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என அவர் தெரிவித்திருந்தார் அத்துடன் 39 ஆம் ஐக்கிய நாடுகள் அமர்வில் கலந்து கொள்வதற்காக சுவிஸ் தூதுவராலயத்திடம் அனுமதி கோரப்பட்டு அதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் சங்கத்தின் சார்பில் இதன் போது கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது