(துறைநீலாவணை நிருபர்)
தமிழ்மக்கள் ஒரணியில் ஒன்றிணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் எம்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் பொறியியலாளர் ஞானபிரகாசம் அவர்களின் ஊடக சந்திப்பு செவ்வாய்கிழமை(30)மாலை 7.00மணியளவில் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டிலே நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலிலே நான் தமிழ்தேசிய கூட்டமைப்பிலே முதன்முதலாக வீட்டுச் சின்னத்தில் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன்.நான் தமிழ்மொழி மீதும்,தமிழ் இனத்தின் மீதும்,தமிழ்மண்ணின் மீதும் நீண்டகாலமாக பற்றுதியுடன் செயற்பட்டவன்.
ஆரம்ப காலத்தில் தமிழ் இனத்தின் மீது வைத்துள்ள பற்றுதி காரணமாக தமிழ்மக்களை பாதுகாப்பதற்காகவும்,தமிழ்மக்
1972 ஆம் ஆண்டு நாட்டிலே காணப்பட்ட அப்போதைய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட அசாம்பாவிதங்கள் காரணமாக தமிழ்மக்களை பாதுகாக்கனும்,தமிழ்மண்ணை பாதுகாக்கனும் எனும் உணர்வுடன் தமிழ்போராட்டங்களில் நான் செயற்படத் தொடங்கினேன்.இத்தகய போராட்டத்தின்போது என்னுடைய பங்களிப்பு பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.அவ்வாறு தமிழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராத்தினால் பல உள்ளூர் இளைஞர்களால் இணைந்து தமிழ்மக்கள்மீது கட்டவீழ்த்தப்பட்ட வன்முறைக்காக போராட வேண்டிய காலமாக அன்று காணப்பட்டது.அதன்பின்பு 1983 ஆண்டு தமிழ் இளைஞர்கள் முன்னெடுக்கப்பட்ட உள்ளூர் இளைஞர்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவாக்கப்பட்டது.
அதன் பிற்பாடு தமிழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது கட்சி பிளவுகளால் பிளவுபட்டது.இதனால் நாங்கள் கட்சியை விட்டு விலகவேண்டிய தேவை எமக்கிருந்தது.அதனால் நாங்கள் ஒதுங்கியிருந்தோம்.அதனால் எங்களுடையை கல்வியை நாங்கள் பின்தொடர வேண்டியுள்ளது.கல்வியில் படித்து நான் பொறியில் பட்டத்தை பெற்றுக்கொண்டேன்.
தற்போது பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ளது.நிச்சயமாக தமிழ்மக்கள் ஒரணியில் ஒன்றிணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.இப்போது பேரினவாத சக்திகளின் செயற்பாடு காரணமாக கிழக்கு மாகாணத்தின் இருப்பு பறிபோகும் நிலை காணப்படுகின்றது.தமிழ்மக்களின் கல்வி,இருப்பு,பண்பாடு,கலாச்சா
பேரினவாத கட்சிகள் தமிழ் பெயரில் கட்சிகளை உருவாக்கி அதற்குள்ளேயே தமிழ் என்று பெயரை சொருகி தமிழ்மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கு தமிழ்மக்களுக்கு படுகுழி வெட்டியிருக்கின்றார்கள்.அக்கு