தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கியதேசியக் கட்சிக்கு முட்டுக்கொடுத்தார்களே தவிர தீர்வுத் திட்டத்தைப் பெறுவதற்கு முயற்சிக்கவில்லை

கடந்த ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சியின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அவ் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு காப்பாற்றும் வேலைகளைச் செய்துகொண்டே இருந்தார்களே தவிர தமிழ் மக்களின் தீர்வுத்திட்டம் தொடர்பாக எள்ளளவும் அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை என எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிடும் முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி nதிரிவித்தார்

தமிழ்மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிடும் முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி அவர்களுக்கு ஆதரவுதெரிவித்து மாபெரும் பிரச்சாரக் கூட்டம் 30 திகதி செவ்வாய்க்கிழமை  மாலை துறைநீலாவணையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில் ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது அவர்களின் பங்காளர்களாக இருந்துசெயற்பட்டு வந்ததுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப் இல்லாமல் அவ் ஆட்சியை முன்னெடுக்கமுடியாத நிலை காணப்பட்டிருந்தது. அதேவேளை முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் பாராளுமன்றத்தினைக் கலைத்தபோது அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றதில் முதல் பங்குதாரர்கள் கூட்டமைப்பையே சாரும்.

 இவ்வாறு ஐக்கியதேசியக் கட்சியின் தேவைக்காகவு அவர்களைக் காப்பாற்றவும் செயற்பட்டவர்களால் ஏன் தமிழ் மக்களின் பிரச்சினைகளையோ அரசியல் கைதிகள் விடயத்திலோ வாய்ப்பேச்சுடன் நிறுத்திவிடுவதுடன் இப் பிரச்சினைகளை அவ் அரசாங்கத்தில் முன்வைக்கவு இல்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அன்று தமிழ் மக்களின் உரிமைக்குரலாக இருந்தனர் ஆனால் இன்று தங்களது தேவைகiளுக்காக கடந்த அரசைக் காப்பாற்றுவதற்காகவே இருந்துவிட்டு இன்று மீண்டும் உரிமையினப் பேசப்போகின்றோம் வெல்லப்போகின்றோம் என்ற வீர வசனங்களைப் பேசிக்கொண்டுவருவது அவர்களது இருப்பைப் பாதுகாப்பதற்காகவே தவிர மக்களைப்பற்றியதல்ல.

2001 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையார் அவர்களினால் 17 வது சீர்  திருத்தம் கொண்டுவரப்பட்டு பொதுச்சேவை, தேர்தல் ,நிதிச்சேவை ,மனித உரிமை போன்ற ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டு அனைத்து விடயங்களும் சுயாதினமாக முன்னெடுக்கப்பட்டது பின்னர் 18 வது சீர்திருத்தம்  கொண்டுவரப்பட்டு இவ் ஆணைக்குழுக்கள் நீக்கப்பட்டு  ஐனாதிபதியின் கைக்குள் சென்றுவிட்டது.

மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாகக் கொண்டுவருவதற்கு தமிழ்மக்களும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் அயராது பாடுபட்டிருந்தனர் ஆனால் அத்தேர்தலில் தழித்தேசியக் கூட்டமைப்பானது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகக் கூறி மடைமைத்தனமாக செயற்பட்டனர். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவை வழங்கி சாதித்தனர் பின்னர் 2019 ஆம் ஆண்டு 19வது சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டபோது  இவ் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டது அப்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐக்கியதேசியக் கட்சிக்கு முட்டுக்கொடுத்து இருந்தபோதும் தமிழர்களின் தீர்வுத்திட்டம் தொடர்பாக எதனையும் முன்வைக்கவில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் மாகாணசபைகள் வழங்கப்பட்டது ஆனால் இந்த மாகாண சபை முறைமையில் எதுவும் இல்லை அங்கிருக்கின்ற முதலமைச்சர் வெறும் இறப்பர் முத்திரைக்கு ஒப்பானவர் அனைத்து அதிகாரங்களும் ஆளுநருக்கே இருக்கின்றது.

இதனைக் கூட கடந்த மாகாணசபைத் தேர்தலில் கிழக்குமாகாணத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களைப் பெற்றும் 7 ஆசனங்களைப் பெற்ற முஸ்லிம் காங்கிரசிக்கு முதலமைச்சரை விட்டுக்கொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் மிச்சமாக இருந்தது இவ்வாறான வேலைகளைத்தான் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றனர்.

தமிழ் மக்கள் 30 வருடம் அகிம்சை வழியிலும் 30 வருடம் ஆயுதவழியிலும் போராடி எதுவும் கைகூடாத நிலையில் இன்று நாம் இருந்து கொண்டிருக்கின்றோம் அன்று  பண்டா செல்வாஒப்பாந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தபோது கிழித்தெறியப்பட்டது அதன்பின் சந்திரகா அம்மையாரினால் வரையப்பட்ட தீர்வுப் பொதிகள் தீ இட்டுக் கொழுத்தப்பட்டிருந்தன அதன் பின்னராவது தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தும் இதுவரைக்கும் கை கூடவில்லை என்றார்

 

Related posts