பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து, அவர்களை விடுதலை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த அமைச்சரவை பத்திரத்தை வரையும் பணிகள் நடைபெறுவதாகவும் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமெனவும் அமைச்சர் மனோ கணேசன் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கும்போது, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அல்லது ஆறு மாத காலத்திற்குள் அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து விடுவிக்குமாறு முன்மொழியவுள்ளதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 15 ஆண்டுகளாக சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் நோயுற்ற நிலையில் மரணித்து வருகின்றனர். ஆகையால் அவர்களின் பிரச்சினைக்குவிரைவாக தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியம் எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.