வடகிழக்கில் இருக்கின்ற தமிழ்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து செயற்படும் பட்சத்தில்தான் தமிழ்மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருக்கின்ற அரசியல்தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாக அமையும் என்பதனை நடைபெற்றுமுடிந்த தேர்தல் வெளிக்காட்டி இருக்கின்றது என இலங்கை தமிழர் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணசமூர்த்திதெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் சனிக்கிழமை மாலை ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறுதெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ் மக்களது தேசியப் பிரச்சினையினை மையாமாகவைத்து வடகிழக்கில் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளினது பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்துள்ளதுடன் இத்தேர்தலில் வடகிழக்கில் இருந்து தேசியப்பிரச்சினைக்காக குரல் கொடுத்த கட்சிகளுக்குத் தோல்வியாகவும் பெரும்பான்மையினத் தலைவர்களுக்கு வெற்றியாகவும் அமைந்திருக்கின்றது இதனைக் கருத்தில் கொண்டு வடகிழக்கில் இருக்கின்ற அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் தேசியப் பிரச்சினையினை மையமாக வைத்து ஒன்றிணையவேண்டும்.
நான் கடந்த காலங்களில் தேசியக் கட்சிகளில்தான் போட்டியிட்டேன் ஆனால் தேசியக் கட்சியில் இருந்துகொண்டு தமிழ் மக்களினது தேசியப் பிரச்சினைக்கு எவ்விதத் தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதனை உணர்ந்துதான் இலங்கை தமிழ் மக்கள் முற்போக்கு முன்னணியினை உருவாக்கி முன்னாள் நீதியரசர் சீவி.விக்கினேஸ்வரன் அவர்களுடன் இணைந்து தமிழ் மக்கள்தேசியக் கூட்டணியில் போட்டியிட்டேன்.
நாங்கள் ஓரணியில் இணைந்து போட்டியிட்டதற்கான காரணம் தந்தை செல்வா அவர்களின் வழிகாட்டலில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயம் முன்னெடுக்கப்பட்டு வந்தது பின்னர் ஆயுதப்போராட்டம் எமது இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது இந்த 6 தசாப்த கால கோரிக்கை தற்போது செயலிழக்கும் நிலையினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்தி இருக்கின்றது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தமட்டில் தேசியப் பிரச்சினையினை விட அபிவிருத்திதான் முக்கியம் என்ற நிலையில் இருக்கின்றனர் இதனால் தமிழ் மக்களின் உரிமைக்கான பிரச்சினை செயலிழந்தும் மழுங்கடிக்கப்பட்டும் போயுள்ளது
2015 ஆண்டுக்குப்பின்னர் தமிழ்த்தேசிக் கூட்டமைப்பானது தேசியப்பிரச்சினையில் எவ்வித கரிசனையும் காட்டவில்லை ஏன் என்றால் ஐ.தேசியக் கட்சியின் நல்லாட்சியில் அரசியல் தீர்வினைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன ஆனால் அவ் அரசாங்கத்தின் பங்காளர்களாக இருந்தது மாத்திரந்தான் ஆனால் அரசியல் தீர்வைப்பற்றி எவ்விதபேச்சுகளோ அழுத்தங்களையோ கொடுக்கவில்லை ஐ.தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் அரசியல் நிர்ணயசபை நிறுவப்பட்டபோதும் அரசியல் தீர்வு விடயம் மந்தகதியாகவே இருந்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முயற்சிசெய்து இந்த விடயத்தை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் பாராளுமன்றத்திற்குஎடுத்துச் சென்று தீர்வு விடயத்தை சமர்ப்பித்து இருக்கலாம் ஆனால் அது நடைபெறவில்லை
இவ்வாறான செயற்பாடுகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புசெய்தமையாலும் அவர்களது அசமந்தப்போக்கின் காரணத்தினால் வடமாகாணமுன்னாள் முதலமைச்சர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்துபிரிந்து தனியாக கட்சியினை ஸ்தாபித்து தமிழர்களுக்காக குரல்கொடுத்துவருகின்றார்.
இந்த நாட்டினை ஆட்சிசெய்த எந்த அரசாங்கமும் தமிழ்மக்களினதுதேசியப்பிரச்சினையினைத் தீர்ப்பதுதொடர்பாக எந்த ஆக்கபூர்வமான நடவனக்கையினையும் செய்யவில்லை அதனைச் செய்வதற்கான மனநிலையிலும் இல்லை தற்போது ஆட்சில் இருக்கின்ற அரசாங்கம் தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பாக எந்த ஆக்கபூர்வமான எந்த சமீஞ்சையையும் காட்டவில்லை.என்பதனை உணர்ந்து தமிழ் கட்சிகள் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்