மக்கள்செறிந்துவாழும் தம்பட்டையில் அதிரடிப்படைமுகாம் அமைக்கப்பட்டுவருகின்றது. மீண்டும் ஓர் இருண்ட யுகத்திற்குள் செல்கின்றோமா? அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பல பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றது. எமது வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி கடந்த காலத்திலே வாக்குகள் பெற்றெடுத்த ஆளுந்தரப்பு அரசியற் பிரமுகர்கள் யாரும் இவை தொடர்பில் குரல்கொடுத்ததாகத் தெரியவில்லை.இதுதானா ஆளுந்தரப்பு தமிழ்அரசியல்வாதிகளின் அபிவிருத்தி?
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்..
சாணக்கியன் எம்.பி. மேலும் கூறுகையில்:
அம்பாறை மாவட்டத்திலும் இல்மனைட் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.
கடந்த காலங்களில் அபிவிருத்தி என்ற விடயங்களை நம்மவர்களும் மேற்கொண்டார்கள். ஆனால் அவர்கள் விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் செய்யத்தவறிய ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் விளம்பரப்படுத்தி கடந்த தேர்தலில் எங்களுடைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு ஒரு தனிநபரின் செயற்பாடு காரணமாக இருந்தது.
எங்களுக்குள்ளேயே சிலரை வைத்து பிரச்சினைகளை வளர்த்துவிட்டு அதில் தாங்கள் பலனடைவதற்குப் பலர் முயற்சிக்கின்றார்கள் என்றும் அவர் மேலும்தெரிவித்துள்ளார்.