வட்டிவெளியில் தாய்மார்களுக்கு உலருணவுப்பொதிகள்.

பொத்துவில் பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட சமுகசேவையாளரும் காரைதீவு தவிசாளருமான கி.ஜெயசிறில் ஏழைத்தாய்மார்களுக்கு உலர்உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.
 
பொத்துவில் வட்டிவெளி கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற தாய்மார்களுக்கான உலர்உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
 
அங்கு அவர் பேசுககயில்  ; 
நதி போல் எனது பணியும் துயரோடு வாழ்கின்ற தாய்மார்களுடைய துயர் துடைக்க பயணிப்பேன்.அதற்கு உதவுகின்ற உள்ளங்களும் என்னூடாகவே ஏழைகளுக்கு சென்றடைய வேண்டுமென்று என்னை ஊக்கப்படுத்தி இப்பணியை சிறப்பாக செய்கின்றார்கள்.
 
எனது பணி நதி போன்றது.நதியை சிலர் விளக்கேற்றி வணங்குகின்றார்கள்.சிலர் பூக்கள் தூவி வரவேற்கின்றார்கள்.சிலர் தங்களுடைய அழுக்குகளை கழுவுவதற்கு நதியில் நீராடுகின்றார்கள்.சிலர் அந்நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றார்கள்.சிலர் கழிவுகளை கொட்டுவதற்கே பயன்படுத்துகின்றார்கள்.
 
இதற்காக எல்லாம் நதி நின்று விடாது நதி ஒடிக்கொண்டேயிருக்கும் எனது பணி தொடர்ந்துகொண்டேயிருக்கும்.போற்றினாலும் தூற்றினாலும் எனது பணி நதி போன்றது.என்றார்.
 
 

Related posts