தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சையின் போது 15 நிமிடங்கள் வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளின் முதலாம் பகுதிக்கு இவ்வாறு 15 நிமிடங்கள் மேலதிகமாக வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி ஓகஸ்ட் மாதம் 4, 5, 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.