தற்காலிக ஊழியர்களின் நியமனத்தை இடைநிறுத்துவது தொடர்பில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களினால் அமைதி இன்மை நிலவியதனால் சிறிது நேரம் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் பெப்ரவரி மாதத்திற்கான கூட்ட அமர்வு செவ்வாய்க்கிழமை(25) மாலை முதல்வர் சட்டத்தரணி எம்.எ.றக்கீப் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கடந்த கூட்டறிக்கையில் சேர்க்கப்பட்ட விடயமான தற்காலிக ஊழியர்களின் நியமனம் இடைநிறுத்தப்பட வேண்டும் என குறித்த நியமன இடைநிறுத்தம் குறித்து சரியான விளக்கம் இந்த கூட்டறிக்கையில் உள்வாங்கப்படவில்லை என உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் மற்றும் சி.எம்.முபீத் ஆகியோர் எழுந்து முதல்வரிடம் கேள்விகளைத் தொடுத்தனர்.
தொடர்ந்து முதல்வர் குறித்த விடயத்திற்கு பதிலளிப்பதற்காக அவகாசம் கோரி பதிலளிக்க முற்பட்ட வேளை ஏற்பட்ட சலசலப்பு காரணமாக 45 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்க பட்ட பின்னர் சபை நடவடிக்கைகள் யாவும் முதல்வர் தலைமையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்தது.
மேலும் புதிதாக கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களாக வருகை தந்த வடிவேல்கரசு சந்திரன் குஞ்சித்தம்பி விஜயலெட்சுமி ஆகியோர் தத்தமது கன்னி உரைகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.