திருகோணமலை அலஸ்கார்டின் பகுதியில் புதன்(14) இரவு ஏற்பட்ட வீதி விபத்தை தொடர்ந்து கார் ஒன்று எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
மாலை 7.30 மணியளவில் திருகோணமலை அலஸ்கார்டின் பகுதியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து மது போதையில் வாகனத்தை ஒட்டி வந்த சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததனால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது குடிபோதையில் வந்த சாரதியின் கார் மோட்டார் வண்டியில் மோதி மோட்டார் வண்டியின் சைலன்ஷர் வெடித்து எதிரே வந்த கார் கண்ணாடியில் பட்டதுடன் பின்பு கார் சாரதி வேகக் கட்டுப்பாட்டினை இழந்து முன்னாள் நின்ற முற்சக்கரவண்டில் மோதியதில் முற்சக்கரவண்டி பிரண்டுள்ளது பின்னர் கார் அருகில் இருந்த கடைக்குள் புகுந்ததில் அங்கிருந்த ஒரு வயோதிப அம்மா காயத்திற்குள்ளாகியதாக கூறப்படுகிறது.
இதனைப்பார்த்த அலஸ்கார்டின் இளைஞர்கள் குடிபோதையில் வந்த சாரதியின் காரை தீயிட்டு எரித்ததனால் அந்தப் பகுதியில் தற்போது பதற்றம் நிலவுகிறது. குறித்த பகுதியில் பொலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.