அம்பாறை, திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பிரதேசத்தில், சந்தேகத்துக்கு இடமாக நடமாடியக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.றாபி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
திருக்கோவில் பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலையடுத்து, கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பிரதேசத்தில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், குறித்த ஐவரையும் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி ஐவரையும் பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.றாபி முன்னிலையில், வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது, சந்தேக நபர்களை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.