சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்ககளை விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டவர்கள் கைது!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வடமுனை காட்டுப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட காட்டு மரங்கள் மாட்டு வண்டியில்  கைப்பற்றியுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்துள்ள்ளதாக வாழைச்சேனை வட்டார வன அதிகாரி சு.தணிகாசலம் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் காட்டு மரங்கள் வெட்டப்படுவதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தமது அலுவலக உத்தியோகஸ்த்தர்கள் பிரதேசத்திற்கு சென்று களப் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது மாட்டு வண்டில்களில் மரங்கள் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்படுவதனை கண்டு அவற்றினை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

இதன்போது சந்தேக நபர்கள் இருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

முதிரை,ராணை போன்ற பெறுமதிவாய்ந்த மரங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட பெருட்க்கள் அனைத்தும் நேற்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி எம்.எச்.எம்.பஸில் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதன்போது குறித்த வழக்கு தொடர்பான சாட்ச்சியங்களை கேட்டறிந்து கொண்ட நீதிபதி சந்தேக நபர்கள் 6 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் மரம் கடத்துவதற்கு பயன்படுத்திய மாடுகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாபடி 6 இலட்சம் காசுப்பிணையில் விடுதலை செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார்.கடத்தி வரப்பட்ட மரங்கள் மற்றும் அதற்கு பயன்படுத்திய மாட்டு வண்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ள்ளது. கைப்பற்றப்பட்ட மரங்கள் சுமார் 5 இலட்சம் பெறுமதிவாய்ந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Related posts