(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)
திருக்கோவில் பிரதேசத்தில் வீடற்ற குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடு கையளிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிந்தனைக்கு அமைவாக உங்களுக்கு ஒரு வீடு நாட்டுக்கு எதிர்காலம் என்னும் வேலைத்திட்டத்தின் ஊடாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதி உதவியுடன் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு திருக்கோவில் பிரதேசத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலகத்தின் சிரேஷ்ட தொழிநுட்ப உத்தியோகத்தர் வி.திவாகரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (09) தம்பிலுவிலில் இடம்பெற்று இருந்தன.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஆறு இலட்சம் மாணிய மற்றும் பயனாளியின் நிதி பங்களிப்பும் இவ் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு இன்று வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டு இருந்தன.
இவ் வீடானது குடிசை வீட்டில் நான்கு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றினை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் திருக்கோவில் பிரதேச செயலாளரின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு புதிய வீடு பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்பட்டு இருந்தன.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமைளாயர் ஆர்.எம்..சுபசிங்க மாவட்ட மேலதிக முகாமையாளர் ஏ.எம்.இப்ராஹீம் மற்றும் கிராம உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகதத்ர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.