மட்டக்களப்பு துறைநீலாவணையினைச் சேர்ந்த வயிரமுத்து – பேரின்பநாயகம் , இலங்கை அதிபர் சேவையின் தரம் ஒன்றிற்குப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பட்|பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றும் வ.பேரின்பநாயகம், இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்திற்கு 2020.01.01 ஆந் திகதி தொடக்கம் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் தரத்திற்கு தெரிவாகிய இவர், ஆரம்பக்கல்வியினை துறைநீலாவணை மகா வித்தியாலயத்திலும், உயர்தரத்தினை கமுஃகார்மேல் பற்றிமா கல்லூரியிலும் கற்றதுடன், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானமாணி மற்றும் கல்வி முதுமாணி பட்டத்தினையும் பெற்றுள்ளார். அத்துடன் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா மற்றும் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார். அத்தோடு கிழக்குப்பல்கலைக்கழகத்தில் கணனி போதனாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
05.10.1994 ஆந் திகதி இலங்கை ஆசிரிய சேவைக்குள் நியமனம் பெற்ற இவர், பிரபல கணித பாட ஆசிரியராக வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயம், துறைநீலாவனை மகா வித்தியாலயம், உதயபுரம் தமிழ் வித்தியாலயம் என்பவற்றில் பணியாற்றி, கணித பாடத்தில் அதிகமான மாணவர்கள் சித்திபெறச் செய்துள்ளார்.
26.01.2012 ஆந் திகதி தொடக்கம் ஆந் திகதி இலங்கை அதிபர் சேவையின்; தரம் இரண்டிற்கு நியமனம் பெற்ற பின்னர் உதயபுரம் தமிழ் வித்தியாலயம், துறைநீலாவனை மகா வித்தியாலயம் என்பவற்றில் பிரதி அதிபராக கடமையாற்றி சமூகத்தில் நன்மதிப்பை பெற்றுள்ளார். இவர் காலஞ்சென்றவர்களான ஆசிரியர் வயிரமுத்து மற்றும் சின்னமுத்து தம்பதியினரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது