கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் புதிய செயலாளர் தங்க வேலாயுதபுரம் விஜயம்!

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் புதிய செயலாளர் ஜ.ஜே.கே. முத்துபண்டா நேற்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள தங்க வேலாயுதபுரம் கிராமத்துக்கு களவிஜயம் மேற்கொண்டார். 
 
கிழக்கு மாகாண விவசாய திணைக்களம் தங்கவேலாயுதம் பிரித்துக்கு உட்பட்ட தங்கவேலாயுதம் கிராமத்தில் பழப் பயிர்ச்செய்கை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கை க்கு முக்கியத்துவம் கொடுத்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது .
அந்த பயிற்சிகளுக்கான விதை உள்ளீடுகளையும் வழங்கி வந்தது .
 
அந்த பயிர்ச்செய்கை யின் அறுவடை விழா அப்பிரதேச விவசாய போதனாசிரியர் எஸ். சி த்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
 
 இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் புதிய செயலாளர் முத்துபண்டா, கிழக்குமாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி எஸ். எம்.ஹுசைன் ,அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பி.திசாநாயக்க ,லாகுகலை பிரதேச உதவி விவசாய பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன் ,மற்றும் விவசாய போதனா சிரியர்கள் பலரும் விஜயம் செய்தனர்.
 
 தங்க வேலாயுதபுரக் கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிக அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக இந்த களவிஜயத்தின்போது ஆராயப்பட்டது.

Related posts