மட்டக்களப்பு மாநகரத்தில் உள்ள வாவிகள் மாசடைந்து வருவதனைத் தடுக்கும் வகையிலும், மாநகரின் தூய்மையினைப் பேணும் வகையிலும் மட்டக்களப்பு மாநகரசபையும் ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா (JICA) தொண்டு நிறுவனமும் இணைந்து “தூய்மையான மாநகரம்” எனும் தொணிப்பொருளின் கீழ் வாவிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாநகர நிர்வாக எல்லைக்குட்பட்ட அமிர்தகழி தொடக்கம் சின்ன உப்போடை வரையிலான வாவிகளையும், அதனை அண்டிய சூழுலையும் சுத்தப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
முறையான கழிவு முகாமைத்துவத்தினைப் பின்பற்றாமல் வாவிகளினுள் வீசப்பட்ட பிளாஸ்டிக் பைகள், போத்தல்கள் மற்றும் பல உக்காத கழிவுப் பொருட்கள் போன்றன அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.