தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் சுகாதார பிரிவின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள் –

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்வரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை சுகாதார விதிமுறைகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றி மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பெரமுனவில் 2020ஆம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நானும் ஜனாதிபதியும் கலந்துக் கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறிய கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகளின் போது சுகாதார பிரிவு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள், அறிவுறுத்தல்களை கடுமையாக பின்பற்றி நடத்துமாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 
சமூக இடைவெளியை கடைபிடித்து அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், தேர்தல் கூட்டங்கள் நடத்தும் இடங்களை சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய அமைக்குமாறும், கூட்டத்திற்கு வரும் மக்கள் முகக் கவசம் அணிவதனை கட்டாயமாக்குமாறும், மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களை முடிந்தளவு மட்டுப்படுத்துமாறும் பிரதமர் வேட்பாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts