இலங்கையர்களுக்கு மிக நீளமான சந்திர கிரகணத்தைப் பார்வையிடும் வாய்ப்பு

21 ஆம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (27) தோன்றவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திர கிரகணம் 1 மணித்தியாலம் 45 நிமிடங்கள் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது Red Blood Moon எனப்படும் சந்திரன் செந்நிறத்தில் காணப்படும்.

முழுமையாக சந்திர கிரகணம் இடம்பெறும் போது, சந்திரன் சூரியனின் ஔியை பெறுவதால் செந்நிறமாகக் காணப்படும் என கூறப்படுகின்றது.

மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கையர்களால் அவதானிக்க முடியும்.

வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் சந்திர கிரகணம் தென்படும்

Related posts