நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40 – 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
சப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
இதேவேளை காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கத்திலிருந்து பொதுமக்களை முன்னெச்சரிக்கை நடக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.