நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கான இரண்டு பேரின் பெயர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது.
அந்தவகையில் குறித்த தெரிவுக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது
12 பேர் அங்கத்துவம் வகிக்கக்கூடிய தெரிவுக் குழுவில் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஏழு உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் மற்றும் நளிந்த திசாநாயக்க ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டது.
இந்நிலையில் பெரும்பாண்மை இல்லாத ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் அதிக உறுப்பினர்களுக்கான இடம் வழங்ககூடாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.