நாட்டின்மீது நம்பிக்கை,விசுவாசம் வைத்துதான் நாட்டை நல்லநிலைக்கு கொண்டு செல்லவுள்ளோம்.நாட்டின் பொறுப்புக்களை உணர்ந்து முன்னைய ஆட்சியாளர்களினால் வாங்கிய பணத்தையும்,அதற்குரிய வட்டிப்பணத்தையும் கொடுத்தான் இளைஞர்களின் எதிர்காலத்தை நல்லநிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் கொண்டு செல்லும்.தற்போது நல்லாட்சி அரசாங்கம் ஏச்சு வாங்கிக் கொண்டுதான் நாட்டை அபிவிருத்தி செய்கின்றது.கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா வியாபாரத்துறைக்கு தடையாக இருக்கின்ற போக்குவரத்துப் பிரச்சனையை சீர் செய்வதன் மூலம் வாழ்வாதரப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாம்.குறிப்பாக பாதை புனரமைப்பு,நீர்ப்பாசன வேலைத்திட்டங்கள்,சிறிய குளங்களை கட்டுவது,இளைஞர்சேவைகள் வேலைத்திட்டங்கள்,கிராமிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என பிரதமந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இரண்டு கோடியே 70 இலட்சம் ரூபா நிதியில் ஆரையம்பதியில் கட்டி முடிக்கப்பட்ட பிரதேச செயலகத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்து உரையாற்றுகையிலே இதனை குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து மேலும் குறிப்பிடுகையில்:- இந்த நாட்டிலே எனக்காக வேலை செய்வதற்கு போதியளவு வசதிவாய்ப்புக்கள் தற்போது அழகாக இருக்கின்றது.அன்று அரச உத்தியோகஸ்தர்களுக்கு வேலை செய்வதற்கு வசதியில்லாமல் இருந்தது.உத்தியோகஸ்தர்கள் இருந்தாலும் அந்தநேரத்தில் வசதிவாய்ப்புக்களோ,கட்டிட வசதிகளோ போதியளவு இருந்திருக்கவில்லை.முதலிலே சிறப்பான வசதிகளை மேற்கொள்வதற்கு அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு வசதிவாய்ப்புக்களை வழங்கவேண்டும்.அதற்கு பிறகு வேலை செய்யவேண்டும்.அதேபோன்றுதான் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை அமைத்து தருகின்றோம்.
சிலபேர் சொல்லுங்கின்றார்கள் வஜிர அபேவர்த்தன எல்லாவற்றிலும் கையடித்துக்கொண்டு செயற்படுகின்றார் என்று கூறுகின்றார்கள்.அதுதான் உள்ளுராட்சி அமைச்சின் வேலைத்திட்டமாகும்.வீடுகளிலும் அவ்வாறுதான் வேலைகள் இடம்பெறுகின்றது.இதற்கு முதல் 2015 ஆம் ஆண்டளவில் 15000 ரூபா முதல் எல்லா கிராமசேவையாளர் பிரிவுகளிலும் பணம் கொடுத்தோம்.இதனை இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக செய்து வருகின்றோம்.இதனால்தான் பிரச்சனைகள் இருந்தது.பிரதேச செயலங்களில் கட்டிடங்களும்,வசதிகளும் இருக்கவில்லை.அதற்காகத்தான் நல்லாட்சி அரசாங்கம் வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.அதேபோன்றுதான் கிராமிய மட்டத்திலே பாரியதொரு விசித்திரமான அபிவிருத்தியையும்,புரட்சியையும்
இதைத்தவிர வெவ்வேறான வேலைத்திட்டங்களை கொண்டு செல்லவுள்ளோம்.அதேபோன்றுதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசன வேலைத்திட்டங்களை கிராமப்புரச்சிக்கு மேலதிகமாக செய்யும் வேலைத்திட்டமாகும்.கிராமிய வேலைத்திட்டம் எனும் வேலைத்திட்டத்தை பாரியதொரு வேலைத்திட்டமாக கொண்டு செல்லவுள்ளோம்.
கிராமத்திலிருந்து குறுகியகாலத்திற்குள் கூடியவேலைத்திட்டங்களை செய்யவுள்ளோம்.கூடிய வேலைத்திட்டங்களை செய்வதற்கே நாங்கள் நிதி ஒதுக்கியுள்ளோம்.பாதைபுனரமைப்பு
இதற்கு மேலதிகமாக யுத்தத்தினால் அழிவடைந்த கிழக்குமாகாணத்தை உள்வாங்கி பாரியதொரு வேலைத்திட்டத்தை செய்யவுள்ளோம்.மாகாணத்திலே இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு அபிவிருத்தி திட்டமிட்டுள்ளோம்.கிழக்கை அபிவிருத்தி செய்ய போக்குவரத்துப் பிரச்சனையுள்ளது.கிழக்குக்கான வானவூர்தி போக்குவரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.இதன்மூலம் சுற்றுலாவியாபாரத்தை ஆரம்பித்தால் கிழக்கில் வாழ்வாதாரமிழந்தவர்களுக்கு வசதிகள்,வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும்.வருடம் முழுவதும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடையும்.
நாட்டை நாங்கள் பாரமெடுத்தபோது பாரியநிதி தேவையாகவுள்ளது.அப்போது நாட்டை மீட்டெடுத்தபோது பாரிய நிதித்தேவை காணப்பட்டது.வட்டியைக்கட்டி கடனை மீளச்செலுத்தினோம்.இன்னும் கொஞ்சம் நாட்கள் கடந்தால் கிறீஸ்நாடு போன்று வங்குரோத்து நிலைக்கு போயிருக்கும்.நாட்டை நம்பிக்கை, விசுவாசத்துடன் நேசித்து கடனை கொடுத்து,வட்டியையும் செலுத்தி வருகின்றோம்.வருமானம் போதாது.அதற்காக வற்வரியை கூட்டி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்றோம்.இதற்காகத்
0778602831