மட்டக்களப்பு கல்லடியில் தனியார் கடைத்தொகுதி தீப்பிடித்து எரிந்துள்ளது.

 

மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையுள்ள தனியாருக்கு சொந்தமான  வன்பொருள்(ஹாட்வெயார்)வணிகக்கடை ஒன்று இன்று வியாழக்கிழமை(19)மாலை 4.45 மணியளவில் தீப்பிடித்து பற்றிக்கொண்டது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதிக்கருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான கடைத்தொகுதியே இன்று தீப்பற்றி எறிந்துள்ளது.தீப்பற்றி எறிந்து கொண்டிருந்த அவதானித்த பொதுமக்கள்,ஆட்டோசாரதிகள் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வருக்கும்,மட்டக்களப்பு பொலிசாருக்கும் தகவலை  தெரியப்படுத்தினார்கள்.

இவ்விடத்திற்கு விரைந்த வந்த மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர்,மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,மாநகரசபை பிரதி ஆணையாளர்,பொலிசார்,மாநகரசபை ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்ச்சியை மேற்கொண்டு வந்தார்கள்.

இதனால் குறித்த வீதியில் போக்குவரத்து ஒரு மணித்தியாலம் துண்டிக்கப்பட்டது.மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.இத்தீ சம்பவத்தால் பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டு அது வழமைக்கு வந்தது.

கடைக்குள் இருந்த பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீப்பிடித்து தீயில் கருகிப்போய் விட்டது.குறித்த கடையில் ஏற்பட்ட தீயினால் கருப்பு நிறமான புகைமண்டலம் சுமார் 10அடிக்கு மேலாக வான்வெளி எங்கும் பரவியது.இதனால் எதுவித உயிர்சேதம் ஏற்படவில்லை.இதுவரையும்
தீப்பிடித்தலுக்கான காரணம் என்னன்று  கண்டறியப்படவில்லை.

Related posts