இலங்கையில் தினமும் 76 புற்றுநோயாளர்கள் புதிதாக பதிவு செய்யப்படுவதாக புற்றுநோய் விசேட மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவ நிபுணர் ஜாலிய ஜயசேகர தெரிவித்தார்.
இதற்கிணங்க 2018ம் ஆண்டு 28 ஆயிரம் புற்று நோயாளர்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆண்,பெண் உட்பட இவர்கள் அனைவரும் 24 அரசாங்க புற்றுநோய் ஆரம்பப் பதிவு நிலையங்களில் தம்மைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புற்றுநோயை ஆரம்பத்தில் இனம் கண்டால் அவற்றைக் குணப்படுத்த முடியும் எனவும் இவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.