காற்று, மழையுடன் கூடிய நிலைமை அதிகரிக்கும்

நாட்டின் வட அரைப்பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும்,நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் அடுத்த சில நாட்களில் மேலும் சிறிது அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர்மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

அநுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக்கூடும்.வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர்வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

Related posts