அன்புவெளி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி 01 கிராம சேவகர் பிரிவிலிருந்து 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கும் கௌரவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
அன்புவெளி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் கே.விஜய் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களும் கௌரவ அதிதியாக பிரதமகுரு சிவஸ்ரீ தி.கு.தேவகுமார் குருக்கள் அவர்களும் சிறப்பு அதிதிகளாக நாவிதன்வெளி 01 கிராம சேவகர் திரு.ஹெப்ரியல் கமு சது நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தின் அதிபர் என்.பாலசிங்கம் கமு சது நாமகள் வித்தியாலய அதிபர் எம்.இராஜகோபால் ஆகியோரும் ஆலய பரிபாலன சபையினர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மாதர் அபிவிருத்தி சங்கத்தினர் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாவிதன்வெளி 01 கிராம சேவகர் பிரிவின் கீழுள்ள நாவிதன்வெளி 7ம் கிராமம் வீ.சீ. கிராமம் ஆகிய மூன்று கிராமங்களையும் உள்ளடக்கியதாக பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்படும் அன்புவெளி சமூக மேம்பாட்டு ஒன்றியம் இரண்டாவது தடவையாக இவ்வாறானதொரு கௌரவிப்பு நிகழ்வை பொதுமக்களின் நிதியுதவியுடன் வெற்றிகரமாக நடாத்தி முடித்தனர்.
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 11 மாணவர்களுக்கும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 4 மாணவர்களுக்கும் மேலும் சிறந்த அறிவிப்பாளருக்கான முதல் தேசிய விருதினை நாவிதன்வெளி சார்பில் பெற்றுக்கொண்ட கே.கிலசன் அவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.