இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் கீழ், நிந்தவூர் கிராமத்தில் இயங்கும் ஶ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம் நாடளாவியரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது .
கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம், புத்தகப்பை ,அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வானது நேற்றுமுன்தினம் நிந்தவூர் ஶ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய அறநெறிப்பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு திருமுன்னிலை அதிதியாக சிவஶ்ரீ பத்மலோஜன் சர்மா கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன் பிரதமஅதிதியாக கலந்து சிறப்பித்தார்.
விநாயகர் அறநெறிப்பாடசாலை மற்றும் அறநெறிப்பாடசாலைமாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
அறநெறி விழிப்புணர்வு பதாதைதிரை நீக்கம், அறநெறிப்பாடசாலை மாணவருக்காக வெளியிடப்பட்ட நூல்கள் கண்காட்சி, மற்றும் கைப்பேணிப்பொருட்கள் கண்காட்சியும்இடம்பெற்றது.
மாவட்டசெயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வினை, மாவட்டச்செயலக இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.பிரதாப்நிகழ்த்தினார்